செய்திகள்

Wednesday 25 November 2009

இந்தியத்தாய் உதைத்துத்தள்ளிய மலையகக் குழந்தைகள்

இலங்கையிலுள்ள மலையக மக்கள் பற்றிய இந்தியாவின் ஈடுபாடு மிகவும் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது। இலங்கையை முழுமையாக அவதானித்து வருவதாக கூறும் இந்தியத்தலைவர்கள் மலையக மக்கள் குறித்தும் அவர்களது அன்றாட பிரச்சினைகள் குறித்தும் பாராமுகமாக செயற்படுவது ஏன் என்ற கேள்வி இப்போது மக்களிடையே எழத் தொடங்கியுள்ளது।




மலையக மக்கள் எந்தளவுக்கு வாழ்க்கைச்சுமையை அனுபவிக்கிறார்கள் என்பதனை விட அவர்களின் வருகை வரலாற்றை மீள்நினைவூட்டுவது அவசியம் என நினைக்கிறேன்.


மலையக மக்கள்

மலையத்தொழிலாளர்கள் என்போர் யார்? என்ற கேள்விக்கு எத்தனை பேருக்கு பதில் தெரியும்। இந்திய வமிசாவளியினர், இந்தியத் தமிழர்கள் என ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்டதொரு தொழிலாளர் சமுதாயம் மலைநாட்டார் என்றும் நாடற்றோர் என்றும் பின்னிலை படுத்தி பல புல்லுறுவிகளால் விமர்சிக்கப்பட்டு மலையகத் தமிழர்கள் என தற்போது அடையாளப்படுத்தும் இந்த மக்களின் கசப்பான வரலாற்றை தமிழர்களே மறந்துவிட்டார்கள்।

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது 1844ஆம் ஆண்டு மத்தியமலைப் பகுதியில் தேயிலைத் தோட்டப்பயிர்ச்செய்கைக்கென இந்தியாவிலிருந்து 14பேர் (கம்பளை என்ற இடத்துக்கு )அழைத்துவரப்பட்டனர்। இதுவே இந்தியாவிலிருந்து தொழிலாளர் என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட முதல் தமிழர்களாவர்।

இருப்பினும் அதற்கு முன்னரும் இந்தியத் தொழிலார்கள் மலையகப் பகுதிகளில் தோட்ட வேலைகள் செய்ததாக வரலாறு கூறுகிறது। கோப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோய் காரணமாக தேயிலை பயிரிடப்பட்டது।
தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்। 1827ஆம் ஆண்டு 10,000 ஆக இருந்த தொழிலாளர் தொகை 1877ஆம் ஆண்டு 1,45,000 ஆக அதிகரித்தது.
1933ஆம் ஆண்டுவரை பல இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சேர்ந்தனர்। இவ்வாண்டின் பின்னர் இந்திய அரசு இலங்கைக்குத் தொழிலாளர் அனுப்பப்படுவதைத் தடைசெய்தது.

ஒரு சோக வரலாறு
தென்னிந்தியாவிலிருந்து கால்நடையாக இராமேஸ்வரம் வந்த மக்கள் கடல்மார்க்கமாக தலைமன்னாரை வந்தடைந்து அங்கிருந்து கால்நடையாகவே மலையகப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டனர்। போதியளவு உணவு, சுகாதாரம், தங்குமிட வசதிகள் இன்றி பல மாதகாலமாக கால்நடையாக வந்ததால் ஆயிரக்கணக்கான தொழிலாளார்களும் குழந்தைகளும் உயிரிழந்ததாகவும் அப்போதைய கதைகள் உண்டு.


வாக்குரிமை
1931ஆம் ஆண்டு 1,00,000 மலையக மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர்। மு ।நடேசு ஐயர் எனப்படும் மலையக மக்களின் முதற் தொழிற்சங்கத் தலைவர் அத் தேர்தலிலே தெரிவு செய்யப்பட்டார்।

புதுக்கோட்டை அரசமரபினர் வழிவந்த அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மக்களின் நலனுக்காக ஆரம்பத்திலிருந்தே குரல்கொடுத்து வந்தார்। அவரோடு இணைந்து முஹம்மது அஸீஸ் என்ற தொழிற்சங்கத் தலைவரும் பலவகையிலும் போராட்டத்துக்குக் கைகொடுத்து தலைமைதந்தார்।

நாடற்றவர்களாயினர்
1948இல் இலங்கையிலிருந்து பிரித்தானியர் வெளியேறியதும், பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இலங்கை பிரஜாவுரிமை சட்டத்துக்கு அமைவாக தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனமையால் இவர்களில் மிகப்பெரும்பாலோர் இலங்கை அரசாங்கதால் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப்பட்டனர்।

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அனைத்து மக்களும் பிரித்தானியர்கள் எனக் கொள்ளப்பட்ட போதிலும் சுதந்திரத்தின் பின்னர் இந்த மக்களுக்கு தாம் இலங்கையர்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது। அதாவது தமது தந்தைவழியில் அல்லது தாய்வழியில் இலங்கை பிரஜை என்பதை ஆதாரப்படுத்தவேண்டியிருந்தது। போதியளவு கல்வித்தகைமை இல்லாததால் பிறப்புச்சான்றிதழ் உட்பட ஏனைய அத்தியாவசிய ஆவணங்களை பெறத்தவறிய அப்பாவி மக்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டனர்। இவர்களில் பலர் சிங்களப் பெயர் கொண்டிருந்தமையால் தப்பித்தனர்। எனினும் அதிகமானோர் தாமாக மீண்டும் இந்தியாவுக்கு சென்றனர்.


சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்

அடுத்து வந்த காலங்களில் இலங்கை அரசு இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது। இவ்வாறான ஒப்பந்தங்களில் ஒன்றான சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் மேற்படி தமிழர்களில் அரைப் பகுதியினருக்கு இலங்கைப் குடியரிமை வழங்குவதெனவும், ஏனையோரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும் முடிவானது, பல காரணங்களால் இது திட்டமிட்டபடி நடைபெறாது போனது। மேலும் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைக்காரணமாகவும் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர்। பெரும்பாலானோர் இலங்கை மலையகப் பகுதிகளிலேயே தங்கிவிட்டனர்।

தொடர்குடியிருப்பும் வாழ்வும்
அக்காலத்தில் தொழிலாளர்களுக்கென அமைத்துக்கொடுக்கப்பட்ட தொடர்குடியிருப்புகளில் (லயன்கள் என அழைக்கப்படுகிறது) தங்கியிருந்த மக்கள் சுமார் 160ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அதே லயன் குடியிருப்புகளில் தான் வாழ்ந்து வருகின்றனர்। இவர்களின் நலன்கள் தொடர்பாக பல இந்திய தலைவர்கள் அக்கறை எடுத்துக்கொண்ட போதிலும் அவை நிரந்தரமான தீர்வினைத்தரவில்லை எனலாம்।

ஈழப்போராட்டமும் மலையகத் தமிர்களும்
அத்துடன் ஈழப்போராட்டம் ஆரம்பித்தபின்னர் அது பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து இந்த அப்பாவி மக்களின் பட்டினிப் போராட்டம் வெளிக்கொண்டுவரப்பாடமலே போனது। வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு மலையக மக்கள் அந்தக்காலம் முதல் ஆதரவை வெளிப்படுத்தி வந்தனர். ஆரம்பகாலத்தில் தந்தை செல்வா மலையக மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் துன்ப துயரங்களை வெளியுலகுக்கு வெளிக்காட்டவும் செய்ததுடன் வாக்குரிமை நீக்கும் முயற்சிக்கு எதிராக கடுமையாகப் போராடிக் குரல்கொடுத்தார்।

1989ஆம் ஆண்டு இ।இரத்தினசபாபதி பாராளுமன்றி்ல் ஆற்றிய உரையொன்றில்,
"இச்சந்தர்ப்பத்தில் மலையகம் சார்ந்த எமது பிரதிநிதித்துவம் பற்றி சில விடயங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.இதற்காக சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க விழைகின்றேன்.

இலங்கை பிரிட்டிஷாரிடம் இருந்து விடுபட்டபோது மலையக மக்களின் வாக்குரிமையும் பிரஜா உரிமையும் பறிக்கப்பட்ட ஆண்டான 1948-ஆம் ஆண்டையே ஆரம்பமாகக் கொண்டு இதை நோக்க வேண்டியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கினை ஈட்டிக் கொடுத்த இம்மக்கள் இந்திய விஸ்தரிப்புவாதிகளாகக் கொச்சைப்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இங்கிருப்பது சிங்கள இனத்துக்கே ஆபத்தானதென இனவெறி கிளப்பி விடப்பட்டது. இவர்களை வெளியேற்றுவதற்காக 1964-இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமும் கைச்சாத்தாகியது.
இதுவே இனவாதத்தின் முதலாவது அடையாளமாகவும், இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகவும் விளங்கியிருக்கிறது" எனக் குறிப்பிட்டு நீண்ட உரையாற்றினார்। இது தவிற யாழ்த்தலைவர்கள் பலரும் மலையக மக்களுக்காக போராடினர்।

மக்களின் எதிர்பார்ப்பு
என்னதான் இருந்தாலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட தமிழர்கள் இந்தியாவையே தமது தாய்நாடு என இன்னும் கொள்கின்றனர்। அன்று முதல் இன்று வரை இந்தத் தொழிலாளர்களின் நலன்காக்க எத்தனையோ தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் இருந்துவருகின்ற போதிலும் இன்னும் அவர்களின் தேவைகள் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை।

இப்போது ஏறத்தாள 10இலட்சத்துக்கும் அதிகமான மலையக தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்கின்றனர்। மூன்றாவது தலைமுறையிலும் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்।

தமது கோரிக்கைக்காக நித்தமும் போராடி பட்டினியுடனும் போதியளவு வசதிகள் இன்றியும் வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களை அந்நியப்படுத்தி பலரும் "தோட்டகாட்டான்" என அழைப்பது வேதனைக்குரியது। பலவீனங்களையும் இயலாமைகளையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி குறிப்பிட்டதொரு வர்க்கத்தினை கீழ்நிலையில் உதாசீனப்படுத்தி உதறித்தள்ளுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்। ஆனால் நிகழ் சமுதாயத்தில் இவ்வாறானதொரு நிலை இருப்பதை இந்தியா உட்பட சர்வதேசக் கல்விச்சமூகம் உணரவேண்டும்। தமது குழந்தைகளை தாமே அந்நியப்படுத்தி உதைக்கும் வரலாற்றுக் கறையை இந்தியா ஏற்படுத்திவிடக்கூடாது

நன்றி
(புதிய மலையகம்)

பொதுமான பயணிகள் ஏறியும் புரப்பட வில்லை !!!!!!!!!!!!!!!!!!!


ரயில் ! என்று கவிஞர்கள் இன்று மலையக மக்களை கைத்தட்டி கொட்டமடிக்கின்றனர். எழில் கொஞ்சும்  இந்து சமுத்திரத்தின் முத்தான எமது நாடு பல் கோடி வளச் சிறப்பினை பெற்று அழகுற வர்ணிக்கப்படுகின்றது. 


உலக சரித்திரத்தில் எட்டி பாய்கின்றதற்கு முயற்சித்தோ அந்தளவிற்கு  மலையக மக்களினதும் நாட்டு மக்களினதும் பங்களிப்பென்பது முற்று கட்டையாகவே திகழ்கின்றது. மேலும் இன்றைய நாட்டின் முதுகெழும்பான திகழும் மலைகய மக்களின் உதிரத்தையே வியர்வையாக சிந்தி உழை க்கும் அளவிற்கு மக்களின் உழைப்பு நாட்டிற்கு தேவைப்படுவதினை மஹாகவி பாரதி பின்வருமாறு விளக்குகின்றார். 
இரும்பை காய்ச்சி உருக்கிடுவீரே! என்ற வரிகளின் மூலம் அழகுற, தெளிவுற காட்டியுள் ளார். மேலும் இன்றை மலையக மக்களின் அன்றாட வாழ்வினையே கருப்பொருளாக கொண்டும் மலையக பிரச்சிணையை அடிப்படையாக கொண்டும் நான் இக்கட்டுரையை எழுத முயற்சிக்கின்றேன்.  


இன்று மலையக மக்களின் அன்றாட பிரச்சினையை எடுத்துக்கொள்வோமானால் மக்களின் வருமானம், அடிப்படை வசதிகள் போதிய அளவாக இல்லாத காரணத்தினால் ஆரம்பகால அதாவது புராதான வெள்ளையரால் அமைக்கப்பட்ட வீடுகளிலேயே வாழவேண்டிய ஒரு சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. மேலும் அரசாங்கம் மக்களை கபடி ஆடும் பகடிவதைஆகவே கொள்ளப்படுவதனால் வாழ்க்கைதரத்தினை நிலையாக வைத்துகொள்வதற்கு பெரிதும் முட்டுக்கட்டையாகவே திகழ்கின்றது. 


மேலும் பொருளாதாரத்தின் ஊசலாகவும் தின்டாடுகின்ற நிலையும் நிலவுகின்றது. மேலும் மலையக பிரச்சிணையை மூலாதாரமாகக் கொண்டு சி.வி.வேலுப்பிள்ளை என்ற மலையக கவிஞர் தேயிலை தோட்டத்திலே எனும் கவிதை மூலம் அழகுற காட்டியுள்ளார்.                


புழுதிபடுக்கையில் எம்மக்களைப் போற்றும் இரங்கற் புகழ்மொழி இல்லை என்றார். 


இவ்வரிகளின் மூலம் மக்களின் அவல நிலையை வழுவூட்டி காட்டியுள்ளார் மேலும் மக்களின் கல்வி நிலையை எடுத்து ​நோக்கும் போது படிப்பு என்பது  எட்டாக்கணியாகவே மாணவர்கள் காணப்படுகின்றது.வரிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் தமது பொருளாதார பிரசுசிணை காரணமாக மேல் படிப்பினை தொடர முடுயாத நிலையும் நிலவுகின்றது.                


மேலும் விலையேற்றம் பொருட்களின் கொள்வனவு ஆகியனவும் மக்களுக்கு வாங்க முடியாத நிலை எட்டியுள்ளதனால் மேலும் இம்மக்களின் வாழ்வு சீரழிவிற்கு உற்படுகின்றது இனிவரும் யுகங்களாவது மலையக மக்களுக்கொரு முடிவு பெறும் விதிவலக்காய் அமையும் என்றும் கூறும் அளவிற்குநவீன யுகம் வளரும் என நாம் நம்புகின்றோம் மேலும் மலையக மக்களின் சுகாதார வசதி, கலாச்சார வசதி, பொருளாதார வசதி என்பன அதிகரித்துக்கொள்ளும் அளவிற்கு அரசாங்கம் மக்களுக்கென பல உதவி களையும்  சமூர்த்தி திட்டங்களையும், ஓய்வூதியம், ஆயுற்காலம், பாதுகாப்பு முதலிய சேவைகளையும் இன்றைய மலையக மக்களுக்காக அரசாங்கம் பங்களிப்பினை வளங்கி வருவதினை மகத்தான சேவைகளின் ஒன்றாக குறிப்பிடலாம். 


மேலும் மலையக மக்களின் பொருளாதார பிரச்சிணையை காலத்திற்கு காலம் பல கவிஞர்கள் தமது காலத்தில் நிலவிய சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு பற்பல நாவல்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளமை சிறப்பாக குறிப்பிடதக்க வியங்களில் ஒன்றாகும்.       ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்ற பலமொழியினை கருத்திற் கொண்டு மக்கள் ஒவ்வருவரும் ஒரு தாயின் பிள்ளை என்ற நோக்கில்  மலையக மக்களுக்கும் சிறந்த ஒரு நல்வாழ்வினை ஏற்படுத்த அணைவரும் ஒன்றிணைவோமாக.

N.மனோஜ்
ப/விபுலாநந்த தமிழ் மகா வித்தியாலயம்ஆண்டு 10

புதிய மலையகம் உதயமாவதற்கு

மலையக மக்கள் மலையகத் தலைமைகளில் நம்பிக்கையிழந்தவர்களாக உள்ளனர். ""புதிய தலைமைகளாக'' உருவெடுத்தவர்கள் அரசியலில் சோரம் போன நிலையில் மலையக அரசியலில் ""மாற்றுத் தலைமை'' என தம்மைப் பிரகடனப்படுத்தியவர்கள் 

மதுபானத்திற்குள் மலையகத்தை மூழ்கடித்து வாக்கு வேட்டையாடியதை வேதனையின் விளிம்பில் நின்று மலையக மக்கள் கூறுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கின்றது. 

மொத்தத்தில் தொடரும் அரசியல் பித்தளாட்டங்களால் ஏமாற்றங்கள் தந்த வலியுடன் மலையக மக்கள் மாற்றுத் தலைமையைத் தேடி தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். 

பிரச்சினைகளுக்குள் மூழ்கிப் போய்க் கிடக்கும் மலையகத்தை ""மீட்பர்களாக'' வேஷமிட்டுப் புறப்பட்டுள்ள அரசியல் தொழிற்சங்கவாதிகளே இன்று மக்களுக்குப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளனர். 

சந்தாவுக்கான தொழிற்சங்கப் போட்டியும் வாக்குகளுக்கான அரசியல் போட்டியும் இணைந்து ஒவ்வொரு அரசியல் தொழிற்சங்கமும் மலையகத்தை பாத்திகட்டி, வேலிபோட்டு மக்களை மந்தைகளாக நினைத்து கட்டி வைக்க முயல்கின்றன. மக்களோ தொழிற்சங்க சந்தா கொடுத்தும் பலனில்லை. அரசியல் பயணத்துக்கென வாக்குகளை அள்ளிக் கொட்டியும் பயனில்லை என்று கூறுகின்றனர். 

மொத்தத்தில் பரம்பரைத் தலைமை, புதிய தலைமை, மாற்றுத் தலைமை, மழைக்கு முளைக்கும் காளான் தலைமை என பல தலைமைகள் உருவெடுத்து அரசியல் தொழிற்சங்க ரீதியில் மலையக மக்களைப் பிரித்து தத்தமது சுகபோக இலாபங்களுக்காக அவர்களைப் பலிக்கடா ஆக்கிக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய போக்குக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று மாத்திரம் மலையக மக்கள் கூறிக் கொண்டிருப்பதில் பலனில்லை. 

மக்கள் தமக்கான சிறந்த அரசியல், தொழிற்சங்கத் தலைமையைத் தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும். ஊழல் நிறைந்த ஏமாற்றுப் பேர்வழிகளான அரசியல், தொழிற்சங்கத் தலைமைகளை தூக்கி எறிய முன்வர வேண்டும். அரசியல் தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் என்ற ரீதியில் மக்கள் ஒன்றிணைய வேண்டும். 

அரசியல் தொழிற்சங்கவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாது மக்களுக்கிடையிலான ஒற்றுமை முன்னெடுக்கப்பட வேண்டும். தொழிற்சங்கத்துக்கான சந்தா செலுத்தப்படும்போது தமது தொழிற்சங்க உரிமைகள் காப்பாற்றப்படுகின்றதா என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். தேர்தல் காலங்களில் வாக்களிக்கும்போது மதுபானத்துக்கும் பணத்துக்கும் வாக்குகளை விற்கும் நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். 

அரசியல்வாதிகளின் öவறும் வாக்குறுதியில் நம்பிக்கை வைக்காது அவர்களின் கடந்த கால சேவை, எதிர்காலத் திட்டங்கள் குறித்து கவனத்தில் எடுத்து மக்கள் வாக்களிக்க முன்வர வேண்டும். மக்கள் நலன் குறித்த திட்டங்களுக்கு அரசியல்வாதிகளிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். 

மக்களின் சந்தாக்களிலேயே தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன. மக்களின் வாக்குகளினாலேயே நாடாளுமன்ற மாகாண சபை, பிரதேச சபைகளுக்கு அரசியல்வாதிகள் செல்கின்றனர். இவை அனைத்துக்கும் காரணகர்த்தா தாமே என்ற நிலையில் நின்று சிந்தித்து, செயற்பட்டு சமூகத்தின் தேøவயை நிறைவேற்றிக் கொள்வதற்கு மக்கள் தயங்கக் கூடாது. 

கையாலாகாத, சுயநல அரசியல், தொழிற்சங்கத் தலைவர்களை ஓரம் கட்டுவது போன்று தம்முடன் இணைந்து சமூகத்துக்கு எதிராகச் செயற்படும் புல்லுருவிகளையும் மக்கள் ஓரம் கட்டத் தயங்கக்கூடாது. அரசியல் உரிமை, கௌரவமான வாழ்வு, பாதுகாப்பு போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து சிந்தித்து செயலாற்ற மலையக மக்கள் முன்வர வேண்டும். 

மொத்தத்தில் புதிய தலைமை குறித்து சிந்திக்கும் மலையகம் முதலில் தனது சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தூர நோக்குடன் செயற்பட முன்வர வேண்டும். இதுவே புதிய மயைலகம் பிறக்க வழிவகுக்கும்
வீரகேசரி-29.03.2009

Saturday 20 June 2009

தமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு

வட மாகாணத்தின் துரித அபிவிருத் திக்கான நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளின் பிடியில் இருந்து வட மாகாணம் முற்றாக மீட்கப்பட்டதையடுத்து அப்பிரதேசத்தின் ஒவ்வொரு துறைகளையும் மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கின் அபிவிருத்தி யுகத்தின் ஆரம்பமென்று இதனைக் கூறலாம்.

யுத்தம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் வட பகுதியின் அபிவிருத்தியில் மாத்திரமன்றி அப்பிர தேசத்துக்குப் பொருத்தமான அரசியல் தீர்வையும் வழங்குவதில் ஜனாதிபதி கூடுதல் ஆர்வம் கொண்டிருப்பது மிகவும் முக்கியமான அம்சமாகும்.

ஐக்கிய இலங்கைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றை வட மாகாண மக்களுக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமென்று ஜனாதி பதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருப் பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தம்.

புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகாணம் முற்றாக மீட்கப்பட்டதையடுத்து அங்கு அபிவிருத்திப் பணிகள் தற்போது பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மக்கள் இப்போது சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதுடன் பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.